கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடல்சார் துறையின் வளர்ச்சிக்கு சர்வதேச ஒத்துழைப்பு, இளைஞர்கள் மற்றும் மகளிர் பங்களிப்பு முக்கியமானது: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேச்சு

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 7:58PM by PIB Chennai

இந்திய கடல்சார் துறையின் வளர்ச்சிக்கு உலகளாவிய கூட்டாண்மை, இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பே முதன்மையானது என மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால் குறிப்பிட்டார்.

'சாகர்மந்தன் 2026' சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் சார்பானந்த சோனாவால், சவூதி அரேபியா, பெல்ஜியம், பூடான் உள்ளிட்ட நாடுகளுடன் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையில் துறைமுக முதலீடுகள், பசுமைக் கப்பல் பாதைகள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து மேம்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார்.

இந்தியக் கடல்சார் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3.23 லட்சமாக உயர்ந்து, உலகளவில் இந்தியா 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது. பெண் மாலுமிகளின் எண்ணிக்கை 7,033 ஆக உயர்ந்துள்ள நிலையில், 2030-க்குள் அதை 20 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320978&reg=3&lang=1

செய்தி அடையாள எண்:2320978

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321091) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी