பிரதமர் அலுவலகம்
அரசுத் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்த தென் கொரிய அதிபர் திரு லீ ஜே-மியுங்-கிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 9:22PM by PIB Chennai
தென்கொரிய அதிபர் திரு லீ ஜே-மியுங்-ன் அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் மேற்கொண்ட இந்தியப் பயணத்தை நினைவு கூர்ந்து, இது, இந்திய-கொரிய சிறப்பு உத்திசார் கூட்டாண்மைக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளதாக திரு மோடி குறிப்பிட்டார்.
இரு நாடுகளும் தங்களது பன்முக ஒத்துழைப்பை ஆழப்படுத்தி, உலக அமைதி, நிலைத்தன்மை, செழிப்பை நோக்கி தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“அதிபர் திரு லீ ஜே-மியுங் அவர்களே, உங்களது வாழ்த்துச் செய்திக்கு நன்றி.
ஏப்ரல் மாதம் நீங்கள் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். நமது சிறப்பு உத்திசார் கூட்டாண்மைக்கு இந்தப் பயணம் ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது.
நமது பன்முக ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உலக அமைதி, நிலைத்தன்மை, செழிப்புக்கான நமது பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை நாம் ஒன்றாக முன்னெடுத்துச் செல்வோம் என்று நம்புகிறேன்.”
***
(Release ID 2320446)
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2321014)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
English
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam