மக்களவை செயலகம்
முன்னாள் மக்களவைத் தலைவர் திரு பாலி ராம் பகத் பிறந்த தினத்தையொட்டி, மக்களவைத் தலைவர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 5:05PM by PIB Chennai
முன்னாள் மக்களவைத் தலைவர் திரு பாலி ராம் பகத் பிறந்த தினத்தையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மக்களவை பொதுச்செயலாளர் திரு உத்பல் குமார் சிங், திரு பாலி ராம் பகத் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
நாடாளுமன்ற செயல்பாடுகள், நடைமுறைகள் குறித்த ஆழ்ந்த அறிவும், செழுமையான நாடாளுமன்ற அனுபவமும் கொண்ட மூத்த சுதந்திரப் போராட்ட வீரரான திரு பகத், 1976-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி, ஐந்தாவது மக்களவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இடைக்கால நாடாளுமன்றம், முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஏழாவது மற்றும் எட்டாவது மக்களவைகளின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
நிதி, திட்டமிடல், பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள், வெளிநாட்டு வர்த்தகம், வழங்கல், எஃகு, கனரகப் பொறியியல் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் மத்திய அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். அவர் பிப்ரவரி 1993 முதல் நான்கு மாத காலத்திற்கு இமாச்சலப் பிரதேச ஆளுநராகவும், 30 ஜூன் 1993 முதல் 1 மே 1998 வரை, ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
பாலி ராம் பகத் 2011-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி புது தில்லியில் காலமானார்.
***
(Release ID: 2320207)
TV/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2320957)
வருகையாளர் எண்ணிக்கை : 4