ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் தலைமையில் கங்கை மறுசீரமைப்புக் குறித்த அதிகாரமளிக்கப்பட்ட பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 12:41PM by PIB Chennai

ஆறுகளில் முழுமையாக மறுசீரமைப்பு செய்வதன் அரசின் உறுதிப்பாட்டிற்கு வலுசேர்க்கும் வகையில், அதிகாரமளிக்கப்பட்ட பணிக்குழுவின் 20-வது கூட்டம் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நமாமி கங்கை திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட கழிவுநீர் உள்கட்டமைப்பு அறிவியல்பூர்வமான  நீர் மேலாண்மை, பாதுகாப்பான மறுபயன்பாடு, நிலத்தடி நீர் மேலாண்மை ஆகியவற்றின் மூலம் ஆறுகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்த முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஜல் சக்தி துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷன் சௌத்ரி, பல்வேறு அமைச்சகங்கள், மாநில அரசுகள், முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கழிவுநீர் உள்கட்டமைப்பு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு மற்றும் மதிப்பீடு, நிலம் கிடைக்கும் தன்மை, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் பாதுகாப்பான மறுபயன்பாடு, சதுப்பு நிலங்கள், நகர சுகாதார செயல்திட்டங்கள் ஆகியவற்றின் நிலை குறித்தும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320589&reg=3&lang=1

***

TV/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2320852) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati