சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இளையோர் தலைமையில் காசநோய் ஒழிப்பு முயற்சிகளை விரைவுபடுத்த சுகாதாரத்திற்கான கூட்டுப் படை உருவாக்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 1:54PM by PIB Chennai

காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தின் கீழ், சுகாதாரத்திற்கான கூட்டுப் படையை மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா புதுதில்லி பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தார். இது காசநோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சியில் இளையோர் தலைமையிலான சமூக பங்களிப்பை வலுப்படுத்துவதை ஒட்டிய சிறந்த நடவடிக்கையாகும். காசநோய் தடுப்பு, தொடக்கத்திலேயே நோயை கண்டறிதல், உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தல், நோய் குறித்து சமூகத்தில் இருக்கும் அவப்பெயரைக் குறைத்தல் ஆகிய செய்திகளை மக்களிடையே பரப்புவதில் இளையோரின் சக்தி, பரந்த அளவிலான தொடர்பு, அர்ப்பணிப்பு உணர்வை பயன்படுத்துவது ஆகியவை இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ஜே.பி. நட்டா, காசநோய் இல்லாத இந்தியா என்ற நிலையை நோக்கிய நாட்டின் முயற்சிகள் வழக்கமான சுகாதாரத் திட்டதிலிருந்து மக்கள் இயக்கமான மாறியுள்ளதாகவும், மக்கள் பங்கேற்பு மற்றும் சமூகத்தின் பொறுப்புணர்வு ஆகியவை இந்த தேசிய நடவடிக்கையின் முக்கிய தூண்களாக உருவாகியுள்ளதாகவும் கூறினார். அரசு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே காசநோயை ஒழிக்க முடியாது என்றும் அதற்கு குடிமக்கள், மக்கள் பிரதிநிதிகள், களப்பணியாளர்கள், குறிப்பாக நாட்டின் இளைஞர்களின் தீவிர பங்கேற்பு அவசியம் என்று வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320653&reg=3&lang=1

***

TV/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2320830) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी