பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு நானா படேகர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 12:23PM by PIB Chennai

பழம்பெரும் நடிகர் திரு நானா படேகர் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், நானா படேகரின் சிறந்த நடிப்புத்திறன், தனித்துவம், தெளிவு ஆகியவை மிகச் சில நடிகர்களிடம் மட்டுமே காணப்படும் என்று கூறியுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சிறந்த பன்முகத்தன்மையையும், படைப்பாற்றலையும் கொண்டு தலைமுறைகள் கடந்தும் நினைவு கூரப்படும் வகையிலான கதாபாத்திரங்களில் அவர் நடித்ததைச் சுட்டிக்காட்டியுள்ள திரு மோடி தான் நம்புவதை வெளிப்படையாகவும், நேரடியாகவும் எடுத்துரைப்பதில் தயக்கமில்லாத குணத்திற்காகவும், அவர் பெரிதும் மதிக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தி, மராத்தி திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பை நினைவு கூர்ந்துள்ள பிரதமர், அவருடைய மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எண்ணற்ற ரசிகர்கள் அனைவருக்கும் பிரதமர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:

"நானா படேகரின் சிறந்த நடிப்புத்திறன், தனித்துவம், தெளிவு ஆகியவை மிகச் சில நடிகர்களிடம் மட்டுமே காணப்படும். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சிறந்த பன்முகத்தன்மையையும், படைப்பாற்றலையும் கொண்டு தலைமுறைகள் கடந்தும் நினைவு கூரப்படும் வகையிலான கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். தான் நம்புவதை வெளிப்படையாகவும், நேரடியாகவும் எடுத்துரைப்பதில் தயக்கமில்லாத குணத்திற்காகவும், அவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.

இந்தி, மராத்தி திரைப்படத் துறைக்கு திரு நானா படேகர் சிறந்த பங்களிப்பு ஆற்றியுள்ளார். அவருடைய மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எண்ணற்ற ரசிகர்கள் அனைவருக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி".

***

(Release ID: 2320571)

AD/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2320773) வருகையாளர் எண்ணிக்கை : 3