எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு உற்பத்தித் துறையில் பாதுகாப்புத் தரநிலை, விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2026 12:03PM by PIB Chennai

எஃகு உற்பத்தித் துறையில் பாதுகாப்புத் தரநிலை, விபத்துத் தடுப்புக் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் வகையில்,  அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் எஃகுத் தொழில் பாதுகாப்பு மன்றம் என்ற உயர்நிலை அமைப்பை  நிறுவ மத்திய எஃகு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இரும்பு, எஃகு உற்பத்தியாளர்கள், சுரங்கத் தொழில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களை உள்ளடக்கிய பாதுகாப்புத் தணிக்கை நடைமுறைகள், விசாரணையை கடுமையாக்குதல், இந்தியச் சூழல்களுக்கு ஏற்ற பாதுகாப்புத் தரநிலைகளை வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் ஒரு பிரத்யேக எஃகுத் தொழில் பாதுகாப்பு இயக்குநரகம், இந்த மன்றத்திற்கு உதவிடும்.

என்எம்டிசி ரூ 5,427 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த திட்டத்தை நிறைவுசெய்து, சத்தீஸ்கரின் நாகர்நாரில், ஆண்டுதோறும் 2 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட ஆலையைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில், பச்சேலியில், ஒரு இரும்புத் தாது பதப்படுத்தும் ஆலை, 135 கி.மீ நீளமுள்ள, ஆண்டுதோறும் 15 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட கூழ்மக் குழாய், ஸ்ட்ரெய்ட் கிரேட் இண்டரேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாகர்நார் பெல்லட் ஆலை ஆகியவை இதில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319469&reg=3&lang=1 

***

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2320337) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी