பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படை ஆதரவுக் கப்பலான எப்எஸ்எஸ்-1 சேவை தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 1:15PM by PIB Chennai
விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத் தளத்தில் கட்டப்பட்டு வரும் கடற்படை ஆதரவு கப்பல்களில் முதலாவது கப்பலான எப்எஸ்எஸ்-1 2026 அக்டோபர் 6 அன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. கடற்படை மரபுப்படி தலைமை விருந்தினராக பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்ராத் சிங் முன்னிலையில் கடற்படையினர் நலச்சங்க தலைவரான திருமதி லைலா சுவாமிநாதன் அதைத் தொடங்கி வைத்தார்.
அத்துடன் எப்எஸ்எஸ்-5-ன் அடித்தள கட்டமைப்பைத் தொடங்கி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், இந்திய கடற்படை, பாதுகாப்பு அமைச்சகம், விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த எப்எஸ்எஸ் கப்பல்கள் 82 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு உள்நாட்டிலேயே வடிவமைக்கப்படுகிறது. இது கடற்படை, கப்பல் கட்டும் தளம், பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள், குறு, சிறு, நடுத்தர தொழிற்துறை நிறுவனங்களுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது. இக்கப்பல்கள் பணியில் இணைக்கப்படும் போது, கடலில் உள்ள போர்க்கப்பல்களுக்கு தேவையான எரிபொருள், தளவாடப்பொருள்கள் ஆகியவற்றை உடனடியாக அளிப்பதன் மூலம் கடற்படையின் ஆழ்கடல் செயல்பாட்டுத் திறன் மேம்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320049®=3&lang=1
***
TV/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2320331)
வருகையாளர் எண்ணிக்கை : 8