பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாமில் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் மேம்பாடு தொடர்பான பயிற்சி பட்டறை

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2026 12:09PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த மத்திய திறன் மேம்பாட்டு ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், இதுதொடர்பான பயிற்சி பட்டறை, அசாம் மாநிலம், கவுகாத்தியில் 2026 அக்டோபர் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, பயிற்சி பட்டறையை தொடங்கி வைக்கிறார். இதில், அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த முதலீட்டாளர்கள், தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தொழிற்பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது, தொழிற்பயிற்சி நிறுவங்களின் உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதி, மாணவர்களின் கல்வி கற்கும் திறன் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது குறித்து இந்த பயிற்சி பட்டறையில் விவாதிக்கப்பட உள்ளது.    

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319951&reg=3&lang=1

***

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2320313) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Bengali-TR