சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது – குடியரசுத் தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2026 2:40PM by PIB Chennai
பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் வரலாற்று சிறப்புமிக்க முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மருத்துவத்துறை என்பது அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்தது மட்டுமின்றி அது இரக்கம், நம்பிக்கையின் அடையாளம் என்று கூறினார். மத்திய அரசின் சுகாதார திட்டங்கள் குறித்து எடுத்துரைத்த அவர், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பயனாளிகளின் சிகிச்சைக்காக இதுவரை ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தொலைதூரப் பகுதி மக்களுக்கும் உயர்தர சிகிச்சை சென்றடைய தொலைமருத்துவ வசதி உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமாறு இளம் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மத்திய சுகாதார அமைச்சர் திரு.ஜே.பி. நட்டா பேசிய போது, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 12 ஆண்டுகளில் 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 800-ஆகவும், இளங்கலை மருத்துவ இடங்கள் 1.42 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. 2029-க்குள் கூடுதலாக 75,000 மருத்துவ இடங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தற்போது பிலாஸ்பூர் எய்ம்ஸ் 776 படுக்கைகள், 41 சிறப்புப் பிரிவுகளுடன் விரிவடைந்துள்ளது. இவ்விழாவில் எம்பிபிஎஸ், செவிலியர் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த 92 மாணவ, மாணவியருக்குப் பட்டங்களும், சிறப்பிடம் பெற்றவர்களுக்குத் தங்கப்பதக்கங்களும் வழங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319526®=3&lang=1
***
TV/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2319770)
வருகையாளர் எண்ணிக்கை : 8