வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தமிழ்நாடு, புதுச்சேரிக்கு பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்ட விருதுகள்
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2026 9:10PM by PIB Chennai
புதுமை, கொள்கை சீர்திருத்தங்கள், தொழில்நுட்பம், நிலையான நிதியளிப்பு ஆகியவற்றின் மூலம் நகர்ப்புற வீட்டுவசதிச் சூழலியலை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி, 'அனைவருக்கும் வீடு' என்ற கருப்பொருளின் கீழ் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் உலக வாழ்விட தினம் 2026-ஐக் கொண்டாடியது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்துறை இணையமைச்சர் திரு டோகன் சாஹு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்ட விருதுகள் 2026-ன் ஒரு பகுதியாக, முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட திட்டங்களின் கீழ் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பங்குதாரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மலிவு விலை வாடகை வீட்டு வளாகங்கள் துணைத் திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான வீடுகளை நிறைவு செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ள முகமைக்கான சிறப்பு விருதை தமிழ்நாட்டின் சிப்காட் வென்றுள்ளது. தங்குமிட நிதி நடைமுறையில் சிறந்த நடைமுறைக்கான விருதையும் தமிழகம் வென்றுள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-ன் கீழ் அனுமதிக்கப்பட்ட மொத்த வீடுகளில், கட்டுமானப் பணிகள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்பட்ட மாநிலம்/யூனியன் பிரதேசங்கள் பிரிவில் புதுச்சேரி, அருணாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவை விருதுகளை வென்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319398®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2319422)
வருகையாளர் எண்ணிக்கை : 13