பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள், சிரமங்கள் ஆகியவற்றை அறிந்து குறைபாடுகளை நீக்க வேண்டும்- மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 5:05PM by PIB Chennai

ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதிலும், அவர்களுடைய நலனை உறுதி செய்வதிலும் அரசின் உறுதிப்பாட்டை மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். தொழில்நுட்பம், டிஜிட்டல் முயற்சிகள் ஆகியவை ஓய்வூதியதாரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எளிமையான, எளிதில் அணுகக்கூடிய சேவைகளாக மாறவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

புதுதில்லியில் டிஎன் சதுர்வேதி நினைவு மண்டபத்தில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஏற்பாடு செய்திருந்த 17-வது ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள், சிரமங்கள் ஆகியவற்றை அறிந்து குறைபாடுகளை நீக்க ஓய்வூதிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இன்று  பெறப்பட்ட 897 குறைகளில் 757 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319228&reg=3&lang=1&_gl=1

***

TV/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319346) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu , Telugu