இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைப் பணிகளை மேம்படுத்தவும், நிலுவையில் உள்ள பணிகளுக்கு தீர்வுகாணவும் சிறப்பு இயக்கம் 6.0-ல் மத்திய விளையாட்டுத் துறை பங்கேற்றுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 4:20PM by PIB Chennai

மத்திய விளையாட்டுத்துறை கடந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு இயக்கம் 5.0-ல் பங்கேற்று குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்ததையடுத்து, தற்போதைய சிறப்பு இயக்கம் 6.0-ன் முன்னேற்பாட்டுக் கட்டப் பணிகளிலும் ஈடுபட்டது.

இந்திய விளையாட்டு ஆணையம், லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனம், தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம், தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம், தேசிய போதைப்பொருள் பரிசோதனை ஆய்வகம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து விளையாட்டுத்துறை சிறப்பு இயக்கம் 5.0-ல் கடந்த ஆண்டு ஈடுபட்டது.

இத்துறையின் கீழ் உள்ள தலைமையகங்கள், கள அலுவலகங்கள் ஆகியவற்றில் 50 இடங்கள் கண்டறியப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணியின் மூலம் 3,90,000 சதுரஅடி இடம் தூய்மைப்படுத்தப்பட்டது. பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.4,07,55,976 வருவாய் ஈட்டப்பட்டது.

சிறப்பு இயக்கம் 6.0-ன் முன்னேற்பாட்டு கட்டத்தில் (2026 செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 30 வரை) விளையாட்டுத்துறை பங்கேற்று தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்கள், தீர்வுகாணப்பட வேண்டிய விவகாரங்கள் ஆகியவற்றை கண்டறிந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319171&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319342) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी