பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாஃப்ட் டென்னிஸ் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துடன் இவ்விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத்தந்த ஜெய் மீனாவுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 2:22PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாஃப்ட் டென்னிஸ் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துடன் இவ்விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத்தந்த ஜெய் மீனாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய சாஃப்ட் டென்னிஸ் விளையாட்டில் இது வரலாற்றுச் சிறப்புமிக்கச் சாதனை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சாதனை இந்தியாவில் இவ்விளையாட்டிற்கு நினைவுகூரத்தக்கப் புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார். இப்பதக்கம் மேலும் பல இளைஞர்களைச் சாஃப்ட் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடவும், சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ள அவர், எதிர்கால பயணத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டிருப்பதாவது:

"இந்திய சாஃப்ட் டென்னிஸ் விளையாட்டில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாஃப்ட் டென்னிஸ் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துடன் இவ்விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத்தந்த ஜெய் மீனாவுக்கு வாழ்த்துகள். அவரது சாதனை இந்தியாவில்  இவ்விளையாட்டிற்கு நினைவுகூரத்தக்கப் புதிய அத்தியாயத்தைக் குறிப்பிடுகிறது.

இப்பதக்கம் மேலும் பல இளைஞர்களைச் சாஃப்ட் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடவும், சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கும். அவருடைய எதிர்காலப் பயணத்திற்கு வாழ்த்துகள்".

***

(Release ID: 2313848)

SS/IR/SM/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2319326) வருகையாளர் எண்ணிக்கை : 16