ஆயுஷ்
ஆயுர்வேத மருந்துடன் யோகாவையும் பின்பற்றியதன் மூலம் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளிடையே 70 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது- ஆய்வறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2026 4:07PM by PIB Chennai
ஆயுர்வேத மருந்துடன் யோகாவையும் பின்பற்றியதன் மூலம் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளிடையே 70 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஜாம் நகரிலுள்ள ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
6 முதல் 14 வயதிற்குட்பட்ட சுமார் 38 குழந்தைகளிடம் 8 வாரகாலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஆயுர்வேத மருந்துடன் குறிப்பிட்ட யோகாசனங்களை பயிற்சி செய்த குழந்தைகளிடம், ஆயுர்வேத மருந்தை மட்டும் உட்கொண்ட குழந்தைகளை விட பெரும் முன்னேற்றம் காணப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏஒய்யு ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு ஜாம் நகரிலுள்ள ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கௌமர்பிரித்தியா துறையால் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற குழந்தைகள் இரு குழுவினராக பிரிக்கப்பட்டனர்.
முதல் குழுவிலிருந்தக் குழந்தைகளுக்கு பிராமி, சங்கபுஷ்பி, யாஷ்டிமது, குடுச்சி ஆகியவற்றைக் கொண்ட மேத்ய ரசாயன சூர்ணா மருந்துக் கலவை தினமும் பாலுடன் இருவேளை அளிக்கப்பட்டது.
இரண்டாவது குழுவிலிருந்தக் குழந்தைகளுக்கு அதே ஆயுர்வேத மருந்துக் கலவையுடன், உத்கடாசனம், அர்தா-ஷலாபாசனம், புஜங்காசனம், ஷவாசனம் ஆகிய யோகாசன முறைகள் காலை, மாலை நேரங்களில் பயிற்சி அளிக்கப்பட்டன.
ஆயுர்வேத மருந்துக் கலவையை மட்டும் உட்கொண்ட குழந்தைகளிடம், தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை 38 சதவீதம் அளவில் முன்னேற்றம் காணப்பட்டது. அதேவேளையில் ஆயுர்வேதத்துடன் யோகா முறையை பின்பற்றிய குழந்தைகளிடம் 70 சதவீத முன்னேற்றம் காணப்பட்டது.
மேலும், ஆயுர்வேத மருந்தை மட்டும் உட்கொண்ட குழந்தைகளின் நினைவாற்றலில் சுமார் 31 சதவீதம் முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், ஆயுர்வேதத்துடன் யோகா முறையையும் பின்பற்றிய குழந்தைகளின் நினைவாற்றலில் சுமார் 61 சதவீதம் முன்னேற்றம் காணப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319152®=3&lang=1
***
SS/IR/LDN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2319320)
வருகையாளர் எண்ணிக்கை : 7