சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
கழிவுப் பொருட்களை அகற்றும் பணியிலிருந்து தொழில்முனைவோராக உயர்ந்த இளம்பெண்
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2026 3:28PM by PIB Chennai
ஆந்திர மாநிலம், குண்டூர் நகராட்சியில் கழிவுப் பொருட்களை அகற்றும் பணியாளராக பணிபுரிந்து வருபவர் மேகலா நன்சாரம்மா. 30 வயதான இவர், மாதம் 8 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்று வருகிறார். நிதிச் சுமையில் இருந்து மீண்டு வர விரும்பிய அவர், தொழில்முனைவோராக வேண்டும் என விரும்பினார். இந்நிலையில், மத்திய அரசின் துப்புரவு தொழில்முனைவோர் திட்டத்தின்கீழ், சொந்தமாக தொழில் தொடங்க விண்ணப்பித்தார். இத்திட்டத்தின்மூலம் அவருக்கு திறந்தவெளி கால்வாயை தூய்மைப்படுத்தும் உபகரணம் வாங்க நிதியுதவி அளிக்கப்பட்டது. டிராக்டருடன் கூடிய உபகரணம் வாங்குவதற்கு கடனாக 10.24 லட்சம் ரூபாயும், ரூ.6.74 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தனது பணியை திறம்பட செய்து வருகிறார். தற்போது தொழில்முனைவோராக உயர்ந்துள்ள மேகலா, மாதந்தோறும் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் வருமானமாக பெறுகிறார். இதன்மூலம் இவரது மாத வருமானம் 18 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், தனது வாழ்வாதாரம் முன்பைக்காட்டிலும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இது தன்னம்பிக்கை, கண்ணியம், சுயமரியாதையை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319117®=3&lang=1
***
SS/LN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2319292)
வருகையாளர் எண்ணிக்கை : 11