PIB Backgrounder
இந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாடு: வந்தே பாரத் முதல் விரைவுச்சாலைகள் வரை
தொலைவைக் குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்துதல்
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2026 12:37PM by PIB Chennai
இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு வசதிகள் என்பது சாலைகளின் நீளத்தை மட்டும் அளவிடுவதல்ல. பயணிகளின் பயண நேரம் எவ்வளவு குறைகிறது என்பதையும் அது உள்ளடக்கியுள்ளது. புதிய பாலங்கள், சுரங்கப்பாதைகள், விரைவுச்சாலைகள், நவீன ரயில் சேவைகள் ஆகியவை நகரங்கள், பிராந்தியங்கள், சமூகங்களுக்கு இடையிலான பயணத்தை விரைவுபடுத்தி வருகின்றன. நீண்ட சுற்றுப்பாதைகள், கடினமான நிலப்பரப்புகள், மெதுவான சாலைகளுக்குப் பதிலாக நேரடி இணைப்பு வசதிகள் உருவாக்கப்படுவதால் மக்களின் அன்றாடப் பயணங்களில் உள்கட்டமைப்பு வளர்ச்சியின் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது.
அசாமில் 2017-ல் திறக்கப்பட்ட பூபேன் ஹசாரிகா பாலம், அசாம்–அருணாச்சலப் பிரதேசம் இடையேயான பயண நேரத்தை 6 மணி நேரத்திலிருந்து 1 மணி நேரமாகக் குறைத்துள்ளது. 2018-ல் திறக்கப்பட்ட போகிபீல் பாலம் மூலம் ஒரு நாள் வரை நீடித்த பயண நேரம் 1 முதல் 2 மணி நேரமாகக் குறைந்தது. மகாராஷ்டிராவின் அடல் பாலம் மூலம் மும்பை–நவி மும்பை இடையேயான பயண நேரம் 2 மணி நேரத்திலிருந்து 20 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. பீகாரின் கோசி ரயில் மகா பாலம் மூலம் 8 மணி நேரப் பயணம் 30 நிமிடங்களாகக் குறைந்தது.
சுரங்கப்பாதைகளும் பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் அடல் சுரங்கப்பாதை 4 முதல் 5 மணி நேரப் பயண நேரத்தை மிச்சப்படுத்துகிறது. விரைவுச்சாலைகளில் தில்லி–மீரட் விரைவுச்சாலை பயண நேரத்தை 2.5 மணி நேரத்திலிருந்து 50 நிமிடங்களாகக் குறைத்துள்ளது. 2026 ரயில்வே கால அட்டவணையில் 549 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 20 ரயில்களின் பயண நேரம் 60 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் குறைக்கப்பட்டுள்ளது.
பாலங்கள், சுரங்கப்பாதைகள், விரைவுச்சாலைகள், நவீன ரயில் சேவைகள் ஆகியவை இந்தியாவின் போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்தி, பிராந்தியங்களுக்கு இடையிலான இணைப்பை மேலும் எளிதாக்கி வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319049®=3&lang=1
***
TV/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2319226)
வருகையாளர் எண்ணிக்கை : 12