ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் முதல் 3டி கட்டுமானத் தொழில்நுட்ப வீடுகள்: ஆந்திராவில் அடிக்கல் நாட்டினார் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான்

இடுகை இடப்பட்ட நாள்: 04 OCT 2026 6:04PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தின் முழுமையான, கிராமப்புற வளர்ச்சிக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில், மத்திய வேளாண்மை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், இன்று குண்டூர் மாவட்டம், புரிபாலம் கிராமத்தில்  நாட்டின் முதல் முப்பரிமாண கட்டுமானத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்படும் 177 வீடுகளைக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ. 3,600 கோடி செலவில் 3 லட்சம் வீடுகள் இந்த திட்டத்தில் கட்டப்பட உள்ளது. ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு நாரா சந்திரபாபு நாயுடு இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு சிவராஜ் சிங் சௌகான், இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டின் முதன்மை மாநிலமாக ஆந்திரா மாற தயாராகி வருகிறது என்றார். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, அமராவதிக்கு ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே நிரந்தரத் தலைநகர் என்ற அந்தஸ்தைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுத் தந்ததோடு, ரூ. 15,000 கோடி சிறப்பு நிதியுதவியையும் விடுவித்துள்ளார் என்று திரு சௌகான் தெரிவித்தார். நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, தேசிய சரஸ் மேளா எனப்படும் சுய உதவிக் குழு கைவினைஞர்கள் திருவிழா தில்லிக்கு வெளியே ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதனை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறினார்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர முதலமைச்சர் திரு சந்திர பாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழும், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் தொடர்ச்சியான ஆதரவுடனும், உள்கட்டமைப்பு, விவசாயம், நவீன தொழில்நுட்பம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஆந்திரப் பிரதேசம் நாட்டின் முதல் மாநிலமாக உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318911&reg=3&lang=1

***

TV/RB/RJ   


(வெளியீட்டு அடையாள எண்: 2319127) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu