நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசத்தில் 4.240 கிலோ அபின் போதைப் பொருள் பறிமுதல், ஒருவர் கைது - மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2026 3:17PM by PIB Chennai

தனது தொடர்ச்சியான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின், மத்தியப் பிரதேசப் பிரிவு சார்பில், குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், 30.09.2026 அன்று கஞ்சர்தா–மனசா சாலையில் ஒரு ஹீரோ மோட்டார் சைக்கிளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4.240 கிலோ அபின் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தப்பட்ட போதைக் பொருள் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்பட்டது, இந்தச் சட்டவிரோத கடத்தலில் தொடர்புடைய வேறு நபர்கள் யாரேனும் உள்ளனரா போன்றவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318176&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2318924) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: Punjabi , Telugu , English , Gujarati , Urdu , हिन्दी