பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவில் தங்கம் வென்ற சுஜீத்திற்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2026 6:15PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்ற சுஜீத்திற்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது முதல் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரிலேயே இந்தியாவுக்கான முதல் மல்யுத்த தங்கப் பதக்கத்தை சுஜீத் வென்று தந்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இதை ஒரு மறக்க முடியாத வெற்றி என்று அவர் வர்ணித்தார்.

சுஜீத்தின் எதிர்கால முயற்சிகளுக்கும் திரு மோடி தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுத் தங்கம் வென்ற சுஜீத்திற்கு வாழ்த்துகள். தனது முதல் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரிலேயே இந்தியாவுக்கான முதல் மல்யுத்தத் தங்கப் பதக்கத்தை அவர் வென்று தந்துள்ளார். இது உண்மையிலேயே ஒரு மறக்க முடியாத வெற்றியாகும்! அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318273&reg=3&lang=1  

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2318580) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Gujarati , Telugu , Malayalam