பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர், அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2026 9:09AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மறைந்த முன்னாள் பிரதமர்ல லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

 

லால் பகதூர் சாஸ்திரியின் எளிமையும், தேசப்பற்றும் இன்றும் ஆழ்ந்த உத்வேகம் அளிக்கின்றன என்று பிரதமர் கூறியுள்ளார். சாஸ்திரியின் சாந்தமான குணம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றும், அவரது உறுதிப்பாடு பாறை போல வலுவாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், "லால் பகதூர் சாஸ்திரி ஜி அவர்களின் எளிமையும், அர்ப்பணிப்பும் தேசத்துக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன" என்று கூறியிருப்பதோடு லால் பகதூர் ஒரு சாஸ்திரி தொடர்பான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

(Release ID : 2318024)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2318105) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Gujarati , Kannada , Malayalam