வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வர்த்தகர்கள் நல வாரியத்தின் 11-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2026 2:32PM by PIB Chennai

தேசிய வர்த்தகர்கள் நல வாரியத்தின் 11-வது கூட்டம், புது தில்லியில் உள்ள வாணிஜ்ய பவனில் நேரடியாகவும், காணொலிக் காட்சி மூலமாகவும் என இருவகையிலும் நடைபெற்றது. வர்த்தக நலன், தொழில் செய்வதை எளிதாக்குதல், டிஜிட்டல் முறையிலான செயல்பாடுகள், கடன் அணுகல், மத்திய-மாநில ஒருங்கிணைப்பு, ஏற்றுமதி மேம்பாடு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இந்த வாரியம் ஆய்வு செய்தது. மேலும், சரக்கு -சேவை வரி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், சேவை வழங்குநர்கள் ஆகியோருக்கு நிறுவன பங்களிப்பை வலுப்படுத்துதல் தொடர்பான அம்சங்களும் இந்த விவாதங்களில் இடம்பெற்றன.

ஆலோசனைகளின் போது, உறுப்பினர்கள் ஜிஎஸ்டி-யை மேலும் முறைப்படுத்துதல், பணம் திரும்பப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள், நீண்ட தணிக்கைகள், உள்ளீட்டு வரிக் கடன் முரண்பாடுகள் உள்ளிட்டவைக் குறித்து விவாதித்தனர்.

தேசிய வர்த்தகர்கள் நல வாரியத்தின் தலைவர் திரு சுனில் ஜெ சிங்கி இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.  இக்கூட்டத்தில், வர்த்தக சங்கங்கள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314814&reg=3&lang=3

***

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2317991) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu