சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தில்லியில் நடைபெற்ற தூய்மைப் பணி

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2026 10:08AM by PIB Chennai

மத்திய சுகாதாரம், குடும்பநல அமைச்சகம் சார்பில், பணியிடங்கள், இருப்பிடங்களை சுத்தமாக பராமரிப்பது குறித்து பொதுமக்கள், ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுதில்லியில் உள்ள ராஜேந்திர பிரசாத் மார்க் பகுதியில் தூய்மை பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளர் டாக்டர் ராஜிவ் பால் தலைமையில், சுகாதாரத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பேசிய ராஜிவ் பால், சுத்தம், சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டுமெனில் ஊழியர்கள், பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என வலியுறுத்தினார். இருப்பிடங்கள் மட்டுமின்றி, பொது இடங்களையும் தூய்மையாக வைத்து கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், அதற்கான முன்னெடுப்புகள் அவசியம் எனவும் இந்நிகழ்வில் அறிவுறுத்தப்பட்டது.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317416&reg=3&lang=1

***

TV/LN/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317810) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati