சுரங்கங்கள் அமைச்சகம்
தில்லியில் சுரங்க அமைச்சகம் சார்பில் தூய்மையே சேவை இயக்கம் - மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2026 11:55AM by PIB Chennai
புதுதில்லி, சாணக்கியபுரியில் உள்ள யஷ்வந்த் பேலஸ் சந்தையில் 'தூய்மையே சேவை 2026' இயக்கத்தின் கீழ், சுரங்க அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தூய்மைப் பணியில், மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, சுரங்கத்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு கேசவ் சந்திரா, மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த தூய்மை இயக்கத்தின் போது, அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, பொது இடங்களைத் தூய்மையாகப் பேணுவதில் அவர்களின் அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பைப் பாராட்டினார். தூய்மை என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு என்பதை வலியுறுத்திய அவர், சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பேணுவதில் மக்கள் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சி, 'தூய்மையே சேவை' என்ற தத்துவத்தையும், தூய்மையான இந்தியாவை உருவாக்குவதில் கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317462®=3&lang=1
***
TV/PLM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2317739)
வருகையாளர் எண்ணிக்கை : 9