பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆபரேஷன் திருஷ்டி: காஷ்மீரில் முப்படைகளின் மருத்துவப் பிரிவு சார்பில் கண் அறுவை சிகிச்சை முகாம்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 30 SEP 2026 8:13PM by PIB Chennai

ஆபரேஷன் திருஷ்டியின் கீழ் நடைபெற்ற 11-வது கண் அறுவை சிகிச்சை முகாம், ஸ்ரீநகரில் உள்ள  ராணுவ மருத்துவமனையில் இன்று நிறைவடைந்தது. டங்தாரிலும், ஸ்ரீநகரிலும் நடத்தப்பட்ட இரண்டு முகாம்களிலும், பிரிகேடியர் சஞ்சய் குமார் மிஸ்ரா தலைமையிலான ராணுவ மருத்துவமனை அறுவை சிகிச்சைக் குழுவினர், கண்புரை, கண் அழுத்த நோய், கண் சதை வளர்ச்சி மற்றும் விழித்திரை தொடர்பான சிகிச்சைகள் உட்பட 364 கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

 

அறுவை சிகிச்சை முகாம்களுக்கு முன்னர், ராணுவ  மருத்துவமனை மற்றும் கள மருத்துவமனை குழுக்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கின் தொலைதூர மற்றும் முக்கியப் பகுதிகளில் 18 பரிசோதனை முகாம்களை நடத்தின. ஏறத்தாழ 6,000 பேர் பரிசோதிக்கப்பட்டதில், சுமார் 500 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு 'ஆபரேஷன் திருஷ்டி' திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா நிறைவு விழாவில் கலந்துகொண்டு, கண் மருத்துவக் குழுவினரின் அர்ப்பணிப்புள்ள பணி, தொழில்முறை நிபுணத்துவம், சேவையைப் பாராட்டினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2317318&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2317381) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Malayalam