குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்திய பாதுகாப்புத்துறை சொத்துக்கள் சேவையின் பயிற்சி அதிகாரிகளுடன் குடியரசுத் துணைத்தலைவர் கலந்துரையாடினார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 SEP 2026 6:23PM by PIB Chennai

குடியரசுத் துணைத்தலைவர்  திரு சி. பி. ராதாகிருஷ்ணன், இன்று குடியரசுத் துணைத்தலைவர்  மாளிகையில் இந்திய பாதுகாப்புத்துறை சொத்துக்கள் சேவையின் (2025 பிரிவு) பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.  அர்ப்பணிப்பு, நேர்மை,  மக்கள் நலனில் வலுவான பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் நாட்டிற்குச் சேவையாற்றுவதற்கான இந்த வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

 

செயற்கை நுண்ணறிவு, புவியியல் தகவல் அமைப்புமுறை, ட்ரோன் ஆய்வுகள், செயற்கைக்கோள் படங்கள், தானியங்கி மாற்றக் கண்டறிதல், முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு நில மேலாண்மையின் துல்லியம், வெளிப்படைத்தன்மை, செயல்திறனை கணிசமாக மேம்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார். தொழில்நுட்பத்துடன் மனிதப் பொறுப்புணர்வும் இணைந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய திரு சி. பி. ராதாகிருஷ்ணன், "தொழில்நுட்பம், பொறுப்புக்கூறலை வலுப்படுத்த வேண்டுமே தவிர, அதற்கு மாற்றாக அமையக்கூடாது" என்று கூறினார்.

 

ஐயன் திருவள்ளுவரின் கருத்துக்களை மேற்கோள் காட்டிய குடியரசுத் துணைத்தலைவர், கற்றல் என்பது நடத்தையில் வெளிப்படும்போதுதான் உண்மையான அர்த்தத்தைப் பெறுகிறது என்று குறிப்பிட்டார். சட்டங்கள், நடைமுறைகள், நிர்வாகக் கட்டமைப்புகள் குறித்த அறிவுடன் நற்பண்பு, கருணை, நேர்மை, அறநெறி சார்ந்த நடத்தையும் இணைந்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2317218&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2317374) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam