வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் புதுதில்லியில் தன்னார்வ ரத்த தான முகாம் - மத்திய இணையமைச்சர் திரு டோகன் சாஹு தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 6:13PM by PIB Chennai

வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின், நகர்ப்புறத் துப்புரவு பிரிவு, இந்திய செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து, புதுதில்லியில் உள்ள சங்கல்ப் பவனில் அமைந்துள்ள அதன் வளாகத்தில் இன்று (29.09.2026) தன்னார்வ ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு டோகன் சாஹு ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்தார். பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்திய சேவை மனப்பான்மையைப் பாராட்டிய இணையமைச்சர், இதுபோன்ற மனிதாபிமான முயற்சிகளுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

"மனிதநேயத்தின் ஒரு துளி, ரத்தம் கொடுங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமில், மொத்தம் 76 அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்று தாமாக முன்வந்து ரத்த தானம் வழங்கினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316596&reg=3&lang=1

----

TV/PLM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317181) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी