பாதுகாப்பு அமைச்சகம்
நவீன போர்முறை, தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப பாதுகாப்புத்துறை மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம்: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
30 SEP 2026 12:14PM by PIB Chennai
நவீன காலப் போர்முறை, தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப பாதுகாப்புத்துறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்று வரும் கடற்படை தளபதிகள் மாநாட்டில் உரையாற்றிய அவர், நாட்டின் பாதுகாப்பில் இந்திய கடற்படையின் பங்களிப்பு அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டினார். கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவின் உத்திசார் பொறுப்புகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு, அமைதியைப் பராமரிப்பதில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மேற்காசியாவில் நிலவும் சூழல் குறித்து பேசிய அவர், பாதுகாப்பான எரிசக்தி விநியோக நடவடிக்கைகளை கடற்படை திறம்பட மேற்கொண்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பான கடல்பகுதிகள், வளர்ச்சி கண்டு வரும் நாட்டிற்கு இன்றியமையாத ஒன்று என்று அவர் எடுத்துரைத்தார்.
மாறிவரும் போர் முறைகள், நவீனத் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு முப்படைகள் இடையே ஒருங்கிணைப்பு, கூட்டுச் செயல்பாடுகள் அவசியம் என்று திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
பாதுகாப்புப் படையின் செயல்பாட்டுத் திறன், கடல்சார் பாதுகாப்பு, எதிர்காலத் திறன் மேம்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316858®=3&lang=1
***
SS/SV/RJ/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2317031)
வருகையாளர் எண்ணிக்கை : 8