தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் மொபைல் சேவைகளின் தரத்தை ட்ராய் மதிப்பீடு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 30 SEP 2026 11:58AM by PIB Chennai

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வாடிக்கையாளர்களுக்கு மொபைல் சேவையின் தரநிலைக் குறித்து தகவல்களை வழங்க ஏதுவாக அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் மொபைல் சேவை வழங்குவதற்கான உரிமம் அளிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தரநிலைக் குறித்த ஆய்வை மேற்கொண்டது.

ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் மொபைல் சேவைகளின் (குரல், தரவு) தரம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த மதிப்பீட்டின் அலைபேசி சேவையின் செயல்திறன் சேவை இணைப்பு, தரவு பதிவிறக்கம், பதிவேற்றம் போன்ற முக்கியச் சேவைகள் குறித்து நிகழ்நேர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவுகளை வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கும் வகையிலும் சேவை வழங்கும் நிறுவனங்கள் அதன் தரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் ட்ராய் வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வு, நகர்ப்புறப் பகுதிகள், முக்கிய இடங்கள், பொதுப்போக்குவரத்து மையங்கள், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் மதிப்பீடு செய்யும் வகையில் இந்த ஆய்வு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316848&reg=3&lang=1

***

TV/SV/RJ/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317002) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese