உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
'ரூட்ஸ் ஆசியா 2027' நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வைத் துவக்கி வைத்தார், மத்திய அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2026 7:06PM by PIB Chennai
இந்தியாவில் நடைபெறவுள்ள 'ரூட்ஸ் ஆசியா 2027' என்ற புகழ்பெற்ற சர்வதேச விமானப் போக்குவரத்து துறை நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். 'ரூட்ஸ் ஆசியா 2027' நிகழ்வில் பங்கேற்கவும், இந்தியாவின் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மற்றும் விரிவடைந்து வரும் விமானப் போக்குவரத்து வாய்ப்புகளைக் கண்டறியவும் உலகளாவிய விமானப் போக்குவரத்துச் சமூகத்திற்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
'ரூட்ஸ் ஆசியா' நிகழ்வின் 24-வது பதிப்பு, 2027 மார்ச் 16 முதல் 18 வரை புதுதில்லியின் பாரத மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஆசியா மற்றும் இதர பகுதிகளைச் சேர்ந்த 115-க்கும் மேற்பட்ட முன்னணி விமான நிறுவனங்கள், 55-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், விமான நிலையம் மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகள், விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த பங்குதாரர்களை இந்த நிகழ்ச்சி ஒன்றிணைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316661®=3&lang=1
***
TV/BR/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2316882)
வருகையாளர் எண்ணிக்கை : 6