பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 4×400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற கிரண் பஹல், பூவம்மா, ப்ரச்சி, வித்யா ராம்ராஜ் ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2026 8:26PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய கிரண் பஹல், எம்.ஆர்.பூவம்மா, ப்ரச்சி, வித்யா ராம்ராஜ் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர்களின் வேகமும் உறுதியுமே இந்தியாவை வெற்றி மேடையின் உச்சிக்குக் கொண்டு சென்றதாகக் கூறிய பிரதமர், இந்தச் சாதனையை இந்திய தடகள விளையாட்டுக்கு ஒரு பெருமைக்குரிய தருணமாக வர்ணித்தார்.
கூட்டு முயற்சியால் எத்தகைய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்கு இந்தச் செயல்பாடு ஒரு சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்ட திரு மோடி, விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்குத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய கிரண் பஹல், எம்.ஆர்.பூவம்மா, ப்ரச்சி, வித்யா ராம்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்களின் வேகமும் மன உறுதியும் இந்தியாவை வெற்றி மேடையின் உச்சிக்குக் கொண்டு சென்றன. இது, இந்திய தடகள விளையாட்டுக்கு ஒரு பெருமைக்குரிய தருணம் மட்டுமின்றி, கூட்டு முயற்சியால் எத்தகைய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகவும் அமைந்துள்ளது! வெற்றிபெற்ற வீராங்கனைகளின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316707®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2316748)
வருகையாளர் எண்ணிக்கை : 19