பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குரூப் - சி பிரிவுகளில் கடந்த 12 ஆண்டுகளில் 23,000-க்கும் மேற்பட்ட பதவி உயர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன – மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 2:18PM by PIB Chennai

மத்திய செயலக குரூப்-சி ஊழியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் அறிவியல், தொழில்நுட்பம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி .விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை இன்று சந்தித்தனர். பணி தொடர்பான விவகாரங்களில் தங்கள் கருத்துகளைத் தொடர்ந்து கேட்டு அறிவதற்கும், அடிக்கடி கலந்துரையாடுவதற்கும் அவர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின்போது, ​​பதவி உயர்வு தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். கடந்த 12 ஆண்டுகளில் 23,000-க்கும் மேற்பட்ட பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஊழியர்களின் ஊக்கத்தைத் தக்கவைக்கவும், நிர்வாகத்தின் திறமையான செயல்பாட்டை உறுதி செய்யவும் சரியான நேரத்தில் தொழில்முறை முன்னேற்றம் கிடைப்பது அவசியம் என்று அவர் கூறினார்.

ஊழியர்கள் ஊக்கமுடன் இருக்கவும், தங்கள் பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றவும், பணிக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதிலும் அரசு ஆர்வமாக உள்ளது என்று கூறினார். ஊழியர்களது பல்வேறு கோரிக்கைகள் தகுந்த நடைமுறைகள் மூலம் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். பணி, பணிப்பிரிவு தொடர்பான அம்சங்களில் ஊழியர்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்கள் முக்கியமானவை என்றும், அவை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313844&reg=3&lang=1

***

TV/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316653) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी