ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல்: இலங்கைக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 3:30PM by PIB Chennai

தேசிய நல்லாட்சி மையத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பிரதிநிதிக் குழுவுடன், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நில வளத் துறை அதிகாரிகள் குழு இன்று (23.09.2026) ஆலோசனை நடத்தியது. நில வளத் துறையின் இணைச் செயலாளர் திரு பி. நரஹரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல், நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நவீனமயமாக்குவது ஆகியவற்றில் இந்தியாவின் அனுபவங்கள் குறித்து கவனம் செலுத்தியது.

இலங்கைத் தூதுக்குழுவிற்கு, அக்குழுவின் தலைவரான பத்திரகே லட்சுமண் பத்மகுமாரி தலைமை வகித்தார். இலங்கை தூதுக்குழுவினரிடையே பேசிய திரு பி. நரஹரி, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளையும், பொது நிர்வாகத்தில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். நிலம் என்பது வெறும் நிர்வாகப் பதிவேடு மட்டுமல்ல எனவும், அது வாழ்வாதாரங்கள், பொருளாதார நடவடிக்கைகள், அரசுத் திட்ட பலன்களைப் பெறுதல், மக்களின் பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, ​​நில அளவைத் துறையின் இயக்குநர் திரு அமித் குமார் சிங், டிஜிட்டல் நில அளவை மேலாண்மைத் திட்டத்திற்கு வலுவூட்டும் சீர்திருத்தங்கள் குறித்து பேசினார். வழக்கமான காகித அடிப்படையிலான பதிவேடுகளில் இருந்து ஒருங்கிணைந்த டிஜிட்டல் நிலத் தகவல் அமைப்புகளுக்கு இந்தியா மாறிவருவதை அவர் எடுத்துரைத்தார்.

டிஜிட்டல், புவிசார் தொழில்நுட்பங்கள் மூலம் வெளிப்படையான, ஒருங்கிணைந்த, மக்களை மையமாகக் கொண்ட நில நிர்வாகத்தை வழங்குவது குறித்து இலங்கை குழுவினருக்கு இதில் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313886&reg=3&lang=11    

***

TV/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316638) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali