ஆயுஷ்
ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, ஜாம்நகர் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2026 5:06PM by PIB Chennai
ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத கற்பித்தல், ஆராய்ச்சி நிறுவனம், 11-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, ஆயுர்வேதம், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள், ஊட்டச்சத்து, தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு, அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஒரு மாத கால பொது விழிப்புணர்வு செயல்பாடுகளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தச் செயல்பாடுகளில் சுகாதாரப் பரிசோதனை முகாம்கள், ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், மூத்த குடிமக்களுக்கான சுகாதாரப் பராமரிப்பு, பள்ளி, அங்கன்வாடிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், மூலிகைச் செடிகள் நடுதல், அறிவியல் பயிற்சி, ஆராய்ச்சி விளக்கங்கள், பயிலரங்குகள் ஆகியவை அடங்கும்.
இதுவரை குறைந்தது 2,577 பயனாளிகள் இந்த நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்றுள்ளனர். செப்டம்பர் 7 முதல் 22 வரை நடத்தப்பட்ட சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுகள் இந்தச் செயல்பாட்டின் பரவலை மேலும் விரிவுபடுத்தியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313965®=3&lang=1
***
TV/PLM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316630)
வருகையாளர் எண்ணிக்கை : 11