ஆயுஷ்
சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ஆயுர்வேத தின கொண்டாட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2026 5:03PM by PIB Chennai
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமான, சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், 11வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, 2026 செப்டம்பர் 18 முதல் 25 வரை தொடர்ச்சியான கல்வி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
ஒரு வாரம் நடைபெறும் இந்த நிகழ்வுகளின் நோக்கம், மாணவர்கள், அறிஞர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரிடையே ஆயுர்வேதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பல்துறை சார்ந்த கற்றலை ஊக்குவிப்பதும், கல்விசார் அறிவை வலுப்படுத்துவதும் ஆகும்.
இந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, இன்று (2026 செப்டம்பர் 23) “ஒருங்கிணைந்த ஆயுஷ் நடைமுறைகளின் எதிர்காலக் கண்ணோட்டங்கள்” என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நாளை (செப்டம்பர் 24) “ஆயுர்வேதக் கோட்பாடுகளும் நோயறிதலின் தனித்துவமான அம்சங்களும்” என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெறுகிறது.
ஒரு வார கால நிகழ்வுகள், செப்டம்பர் 25 அன்று ஆயுர்வேத துணை அறுவை சிகிச்சை முறைகள் குறித்த செய்முறைப் பயிற்சித் திட்டத்துடன் நிறைவடையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313963®=3&lang=1
***
TV/PLM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316622)
வருகையாளர் எண்ணிக்கை : 10