திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தூய்மைப் பணிகளுக்கான சிறப்பு இயக்கம் 6.0-ஐ செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2026 12:51PM by PIB Chennai
மத்திய அரசு, தூய்மைப் பணிகளுக்கான சிறப்பு இயக்கம் 6.0-ஐ 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் 2026 செப்டம்பர் 15 முதல் 30-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு அலுவலகங்களில் தூய்மைப் பராமரிப்பை வழக்கமான பணிகளில் ஒன்றாக மேற்கொள்வதற்கும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்கும், திறன் வாய்ந்த ஆவண மேலாண்மை, மின்னணு கழிவு மேலாண்மை, இட வசதியை திறம்பட பயன்படுத்துதல், பணியிடச்சூழலை மேம்படுத்துதல் போன்ற அம்சங்களில் இந்த இயக்கம் கவனம் செலுத்துகிறது.
இதன்படி, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் தங்களது அலுவலகங்களில் தூய்மையை பராமரிக்கவும் ஆவண மேலாண்மை, இடவசதிப் பயன்பாடு, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட 3 கோரிக்கைகள், 7 உறுதிமொழிகள், 307 பொது மக்களின் குறைகள், 27 குறை தீர்ப்பு மேல்முறையீடுகள் ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316391®=3&lang=1
***
SS/SV/PS/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316521)
வருகையாளர் எண்ணிக்கை : 9