சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாழ்வாதாரத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் பிரமான் முக்கிய கருவியாக திகழ்கிறது: மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 11:16AM by PIB Chennai

அதிகரித்து வரும் உலக அளவிலான ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றி காடுகளை அழிக்காமல், மரங்களை சேகரிப்பதற்கான நடைமுறைகளில் இந்திய உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வனம் சார்ந்த நிறுவனங்களுக்கு பிரமான் முக்கிய கருவியாக அமையும் என்று மத்திய வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று இந்திய வனம், மரச்சான்றிதழ் வழங்கும் திட்டத்தின் கீழ் பிரமான் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய வன மேலாண்மை நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

33,000 ஹெக்டேர் பரப்பிலான தோட்டங்களுக்கு ஆந்திரப் பிரதேச வன மேம்பாட்டு கழகம், ஒடிசா மூங்கில் மேம்பாட்டு முகமையுடன் தொடர்புடைய விவசாயி திரு கோவிந்த் மொஹபத்ராவிற்கு பிரமான் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் சர்வதேச அளவில் வர்த்தகம், சந்தை வாய்ப்புகளை சரிபார்க்கக்கூடிய நிலைத்தன்மை சான்றிதழ்களுடன்  இணைந்து வருவதால் உள்ளுர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிப்போம், உலகளவில் செயல்படுவோம் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

நிலையான வன மேலாண்மை, காடுகளுக்கு வெளியே உள்ள மரங்களுக்கான மேலாண்மை அமைப்புகளில் இந்தியா சிறப்பாக செயல்படுவதற்கு இந்த பிரமான் திட்டம் வழிவகுப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316355&reg=3&lang=1

***

SS/SV/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316437) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी