இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் ஒழிப்பு இளையோர் இயக்கம் – நாடு முழுவதும் 400 இடங்களில் ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2026 9:08PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் ஒழிப்பு இளையோர் இயக்கத்தின் கீழ், “எனது ஆரோக்கியம், எனது பெருமை ”என்ற கருப்பொருளில் நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மை பாரத் உள்ளிட்ட அது சார்ந்த அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் 2.50-க்கும் அதிகமான இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

நாடு முழுவதிலும் நடத்தப்பட்ட இந்த இயக்கம் இளைஞர்களிடையே உடல் மற்றும் மனநலனை மேம்படுத்துவது குறித்தும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஆரோக்கியம், நல வாழ்வு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவும் நேர்மறையான வாழ்வியல் முறையை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்தன.

இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக மருத்துவ பரிசோதனை முகாம்கள், சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகள், தியான நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவை தவிர நோய்த் தடுப்பு உள்ளிட்ட நலவாழ்வுக்கான அம்சங்களில் கவனம் செலுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315667&reg=3&lang=1

***

TV/SV/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316426) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Gujarati , English , Urdu , हिन्दी , Telugu