பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பிராச்சி சௌத்ரிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2026 7:57PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பிராச்சி சௌத்ரிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அவரது சிறப்பான செயல்பாடு இந்தியாவுக்குப் பதக்க மேடையில் ஒரு மறக்கமுடியாத இடத்தைப் பெற்றுத் தந்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார். அவரது வருங்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய திரு மோடி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பிராச்சி சௌத்ரிக்கு வாழ்த்துகள். அவரது சிறப்பான செயல்பாடு, இந்தியாவுக்குப் பதக்க மேடையில் ஒரு மறக்கமுடியாத இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315363&reg=3&lang=1         

***

TV/BR/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316394) வருகையாளர் எண்ணிக்கை : 14