பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குண்டு எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தஜிந்தர்பால் சிங்கிற்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
26 SEP 2026 7:55PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குண்டு எறிதல் பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்ற தஜிந்தர்பால் சிங்கின் அபாரமான செயல்பாட்டிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.
தஜிந்தர்பால் தனது கவனம் மற்றும் விடாமுயற்சியின் மூலம் நாட்டிற்குத் தொடர்ந்து பெருமை சேர்த்துள்ளார் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மற்றொரு பதக்கம், அவரது சிறப்பானப் பயணத்தில் ஒரு மணி மகுடம் என்று குறிப்பிட்ட திரு மோடி, எதிர்காலத்திலும் அவருக்கு இன்னும் பல வெற்றிகள் கிடைக்க வாழ்த்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
"தஜிந்தர்பால் சிங்கின் மிகச் சிறப்பான செயல்பாடு! ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் குண்டு எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள்.
தஜிந்தர்பால் தனது கவனம் மற்றும் விடாமுயற்சி மூலம் நாட்டிற்குத் தொடர்ந்து பெருமை சேர்த்துள்ளார். அவரது சிறப்பான பயணத்தில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வென்றிருக்கும் மற்றொரு பதக்கம் அவரது சிறப்பானப் பயணத்தில் ஒரு மணி மகுடம். அவருக்கு இன்னும் பல வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315360®=3&lang=1
***
TV/BR/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316390)
வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam