பாதுகாப்பு அமைச்சகம்
பாரதீப் கடற்பகுதியில் ரசாயன கப்பலின் இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2026 5:00PM by PIB Chennai
ஒடிசாவில் பாரதீப் கடற்பகுதியில் பெலிஸ் நாட்டு கொடியுடன் சென்றுகொண்டிருந்த எம்டி சீகல் 9 என்ற ரசாயன கப்பலில் ஏற்பட்ட இயந்திரக் கோளறை சரிசெய்து இந்தியக் கடலோர காவல்படை பெரும் விபத்தை தவிர்த்துள்ளது.
9000 மெட்ரிக் டன் பாமாயில், 23 பணியாளர்களுடன் சென்ற இந்த கப்பலில் நேற்று (27.09.2026) காலை இயந்திரக் கோளாறு ஏற்பட்டதுடன் சமநிலைப்படுத்தும் தொட்டியில் கடல்நீர் புகுந்ததால் கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்ததை தொடர்ந்து இந்திய கடலோர காவல்படைக்கு அவசர உதவிக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து இந்தியக் கடலோர காவல் படைக்கு சொந்தமான விஸ்வஸ்த் கப்பல் அப்பகுதிக்கு விரைந்து அனுப்பப்பட்டது. அதிலுள்ள கடலோர காவல் படையில் சிறப்பு சேதக் கட்டுப்பாட்டுக்குழு பாதிக்கப்பட்ட கப்பலில் சீரமைப்பு பணிகளை தொடங்கியது. மேலும் கப்பலில் புகுந்த கடல்நீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், அவசரகால சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் பாரதீப் துறைமுக ஆணையத்தின டால்பின் என்ற இழுவைக்கப்பல் பாதிக்கப்பட்ட கப்பலை துறைமுகத்துக்கு கொண்டு சென்று கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை வழங்கி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316037®=3&lang=1
***
TV/SV/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2316224)
வருகையாளர் எண்ணிக்கை : 9