தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவால் உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2026 4:24PM by PIB Chennai

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில்  இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு, இந்திய தொழில் வழங்குநர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக்காலத்தில் தொழில்துறை உறவுகள், பணியிடை பங்கேற்பை மறுசீரமைத்தல் என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெற்ற தொழிலாளர் விவகாரங்கள் குறித்த தேசிய மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவை தொடங்கிவைத்து உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.

மாறிவரும் சூழல்கள், வளர்ச்சிக் கண்டு வரும் பொருளாதார நிலைக்கு ஏற்ப நாட்டின் தொழிலாளர்கள், சமூகப்பாதுகாப்புச் சூழலை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

செயற்கை நுண்ணறிவு, தானியங்கி தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை  இந்திய இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட வேண்டுமென்று மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2315998&reg=3&lang=1

 

***

TV/SV/PS/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2316217) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu