தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
புதுதில்லியில் செல்போன் நெட்வொர்க் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2026 4:30PM by PIB Chennai
புதுதில்லியின் தெற்கு பகுதி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள இடங்களில் செல்போன் நெட்வொர்க்கின் தரம் குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்தது. துவாரகா, உத்தம் நகர், ஜனக்புரி, மால்வியா நகர், லஜ்பத் நகர், படேல் நகர், கரோல் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செல்போன் நெட்வொர்க் சேவை, அதன் தரம், அழைப்பு துண்டிப்பு, தரவுகள் பதிவேற்றம் போன்றவை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் 2ஜி முதல் 5ஜி வரையிலான நெட்வொர்க் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு செல்போன் நிறுவனங்களின் சேவை தன்மையை அறிந்துகொள்ளும் வகையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316006®=3&lang=1
***
TV/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2316204)
வருகையாளர் எண்ணிக்கை : 9