கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாகன பரிசோதனை முகமைகளை மேம்படுத்த ரூ.780 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய கனரகத் தொழிற்சாலைகள் அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2026 1:06PM by PIB Chennai

மத்திய கனரகத் தொழிற்சாலைகள் அமைச்சகத்தின் தேசிய வாகன வாரியத்தின் கீழ் சென்னை ஒரகடத்தில் இயங்கும் சர்வதேச வாகன ஆராய்ச்சி மையம் சார்பில், வாகன பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் வாகனங்களின் பாதுகாப்பு, புகை உமிழ்வு, உதிரிபாகங்கள் உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்து சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் வாகன பரிசோதனை முகமைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 780 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முகாம்களுக்கான உபகரணங்கள் வாங்க 221.13 கோடி ரூபாயை சர்வதேச வாகன ஆராய்ச்சி மையம் ஒதுக்கியுள்ளது. இதன்மூலம், மின் வாகனங்களின் பேட்டரியை ஆய்வு செய்யும் கருவிகள், கனரக வர்த்தக வாகனங்களை பரிசோதனை செய்யும் உபகரணங்கள், ஆய்வகங்களுக்கானத் கருவிகள், தானியங்கி பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட உள்ளன.

சர்வதேச அளவில், தொழில்நுட்பம், பாதுகாப்பு ரீதியாக இந்திய வாகனத் துறை போட்டிபோடும் அளவுக்கு இந்த முதலீடு அமையும் என கனரகத் தொழிற்சாலைகள் துறை தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315890&reg=3&lang=1

***

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2316186) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Telugu