பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டி - தங்கப் பதக்கம் வென்ற மகளிர் கபடி அணியினருக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2026 7:46PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மகளிர் கபடி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வீரர்கள், அபாரமான துணிச்சல், நிதானம், கூட்டு முயற்சியை வெளிப்படுத்தியுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார். நமது கபடி வெற்றியாளர்களால்  இந்தியா பெருமிதம் கொள்வதாகக் கூறிய திரு மோடி, வீரர்கள் எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

“விறுவிறுப்பான இறுதிப் போட்டி! மகளிர் கபடி அணி தங்கம் வென்று  சாதனை!

நமது வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த அணி அபாரமான துணிச்சல், நிதானம், கூட்டு முயற்சியை வெளிப்படுத்தியுள்ளது. நமது கபடி சாம்பியன்களைக் கண்டு இந்தியா பெருமை கொள்கிறது. இனிவரும் காலங்களில் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315355&reg=3&lang=1   

***

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2315962) வருகையாளர் எண்ணிக்கை : 36