பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப்படை சார்பில் தரங் சக்தி பயிற்சி ஜோத்பூரில் தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2026 4:45PM by PIB Chennai

இந்திய விமானப்படை சார்பில் ஜோத்பூர் விமானப்படைத் தளத்தில் 'தரங் சக்தி 2026' பயிற்சி நேற்று (26.09.2026) தொடங்கியது.  2026 அக்டோபர் 12 வரை நடத்தப்படும் இந்த பலதரப்பு விமானப் பயிற்சியானது, "ஒத்துழைப்பில் வலிமை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிது. இது, இணைந்து செயல்படுவதன் மூலமும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும், நட்பு நாடுகளின் விமானப்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவதன் மூலமும் கிடைக்கும் வலிமையை வலியுறுத்துகிறது.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய ஏழு நட்பு நாடுகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளன. 2024-ல் வெற்றிகரமாக நடைபெற்ற முதல் பதிப்பின் தொடர்ச்சியாக, தரங் சக்தி 2026 பயிற்சியானது தற்போது நடத்தப்படுகிறது.  பயிற்சியின் போது பல்வேறு தொழில்முறை, கலாச்சார, மக்கள் தொடர்பு செயல்பாடுகளும் இடம்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315563&reg=48&lang=1

****

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2315633) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi