கலாசாரத்துறை அமைச்சகம்
பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் மின் ஏலத்தில் இடம்பெற்றுள்ள ராஜஸ்தானின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொருட்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
27 SEP 2026 3:03PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் மின்-ஏலம் 2026-ல் இடம்பெற்றுள்ள பல்வேறு பொருட்களின் தொகுப்பில், ராஜஸ்தானின் கலை, பக்தி, கைவினைத்திறன், பாரம்பரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பல பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொகுப்பில், மாநிலத்தின் நாட்டுப்புற தெய்வங்கள், பாரம்பரிய ஓவியங்கள், ஜவுளிகள், கட்டடக்கலைப் பாரம்பரியம், விளையாட்டுச் சாதனைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் 37 கலைப்பொருட்கள் உள்ளன.
இவற்றில், மரத்தில் செதுக்கப்பட்டு பாரம்பரிய வடிவங்களால் அலங்கரிக்கப்பட்ட, அம்பாபரி யானையும் ஒன்றாகும். இந்தத் தொகுப்பில், நாட்டுப்புற தெய்வமான வீர தேஜாஜி மகாராஜ், குதிரையின் மீது அமர்ந்திருப்பதைச் சித்தரிக்கும் ஒரு வெள்ளிச் சிலையும் இடம்பெற்றுள்ளது.
இந்த மின்-ஏலம், ராஜஸ்தானின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் மரபுகளையும் எடுத்துரைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பரிசு பொருட்களை கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315532®=3&lang=1
****
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2315578)
வருகையாளர் எண்ணிக்கை : 10