குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற உலக சேவை தின விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
சேவையின் உண்மையான மகத்துவம் மனித வாழ்க்கையைச் சிறப்பாக மாற்றுவதில் உள்ளது: திரு சி பி ராதாகிருஷ்ணன்
இடுகை இடப்பட்ட நாள்:
27 SEP 2026 2:52PM by PIB Chennai
மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கேரளாவின் கொல்லத்தின் அமிர்தபுரியில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் நடைபெற்ற உலக சேவை தின (விஸ்வ சேவா தினம்) கொண்டாட்டத்தில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (27.09.2026) பங்கேற்றார்.
இந்நிகழ்வின் போது, அவர் மடத்தின் பல புதிய சேவை நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார். ஆசிரமத்தின் மூன்று புதிய வெளியீடுகளையும் அவர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், மாதா அமிர்தானந்தமயி-ன் வாழ்க்கை, அன்பு, கருணை, தன்னலமற்ற சேவை ஆகயவற்றுக்கு எடுத்துக்காட்டு என்று கூறினார்.
மாதா அமிர்தானந்தமயி மடத்தின் பணிகளில் சுகாதாரப் பராமரிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும் என்பதை எடுத்துரைத்த திரு சி பி ராதாகிருஷ்ணன், 1998-ம் ஆண்டு முதல் இந்த மடத்தின் சார்பில் இந்தியாவில் 890 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் 64 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்த மடத்தால் உலக அளவில் 55,000-க்கும் மேற்பட்ட கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். சேவையை வெறும் புள்ளிவிவரங்கள் மூலம் மட்டும் புரிந்துகொள்ளாமல், அது மனித வாழ்வில் உருவாக்கும் சிறப்பான மாற்றத்தின் மூலமே புரிந்துகொள்ள வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள முதலமைச்சர் திரு வி டி சதீசன், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315530®=48&lang=1
****
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2315573)
வருகையாளர் எண்ணிக்கை : 14