குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கேரளம் மாநிலத்திற்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 SEP 2026 5:49PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், இம்மாதம் 27-ம் தேதி அன்று, ஒரு நாள் பயணமாக கேரளம் செல்கிறார்.
அவரது இந்தப் பயணத்தின்போது, கொல்லத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில், மாதா அமிர்தானந்தமயியின் 73-வது பிறந்ததினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஸ்வ சேவா தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சியில், ஆண்டு விழா கொண்டாட்டங்கள் மற்றும் பல்வேறு நலவாழ்வு சார்ந்த திட்டங்களும் தொடங்கப்பட உள்ளன.
மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ உத்ராடம் திருநாள் மருத்துவ அறிவியல் அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகவும் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்கிறார்.
****
(Release ID: 2315311)
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2315377)
வருகையாளர் எண்ணிக்கை : 9