ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் ரயில்வேத்துறை உயர் முன்னுரிமை அளித்து வருகிறது மத்திய அமைச்சர் திரு வி சோமன்னா

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2026 3:30PM by PIB Chennai

புதிய ரயில்வே, புதிய ஆந்திரப் பிரதேசம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நகர்ப்புறப் போக்குவரத்து, ரயில் பாதுகாப்புக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், குண்டூர் - நம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே, நான்கு வழிச் சாலை வசதியுடன் கூடிய மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு மத்திய இணையமைச்சர்கள்  திரு வி சோமன்னா, டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இணைந்து அடிக்கல் நாட்டினர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ரயில்வேத் துறை இணையமைச்சர் திரு வி சோமன்னா, பயணிகளின் பாதுகாப்பு, செயல்பாட்டுத் திறனுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

விபத்துகள் இல்லாத நிலையை அடைவதற்கும், ரயில்கள் சரியான நேரத்தில் இயங்குவதை உறுதி செய்வதற்கும், நவீன மேம்பாலங்கள், ரயில்வே சுரங்கப்பாதைகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அமைச்சர் குறிப்பிட்டார்.

மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் தவிர, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 74 ரயில் நிலையங்கள் ரூ 3,500 கோடி முதலீட்டில், நவீன உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315288&reg=3&lang=1     

****

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2315351) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu , Kannada